ராஜ்யசபா தேர்தல்.. பாமக புறக்கணிப்பால் கனிமொழிக்கு பின்னடைவா?

தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. அதிமுக அணியில் 5 எம்.பிக்கள் வெற்றி உறுதியாகி இருக்கிறது. 6வது எம்.பி. இடத்துக்கு திமுகவின் கனிமொழியும் தேமுதிகவின் இளங்கோவனும் போட்டியிடுகின்றனர்.
திமுகவுக்கு 23 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மேலும் தலா 2 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவையும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் தற்போது திமுகவுக்கு 27 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது,
தேமுதிகவுக்கு மொத்தம் 29 எம்.எல்.ஏக்கள் இருந்த போதும் 7 எம்.எல்.ஏக்கள் அதிருப்தி அணியில் இருக்கின்றனர். இதனால் 22 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் உள்ளது.
தேமுதிகவும் திமுகவும் 5 எம்.எல்.ஏக்கள் கொண்ட காங்கிரஸ் ஆதரவைக் கோரியுள்ளன. இதேபோல் 3 எம்.எல்.ஏக்களைக் பாமகவின் ஆதரவை திமுக கோரியிருந்தது. ஆனால் திமுகவை ஆதரிக்க பாமக மறுத்து தேர்தலை புறக்கணித்துள்ளது.
பாமகவின் 3 எம்.எல்.ஏக்கள் ஆதரவு திமுகவுக்கு கிடைத்திருந்தால் 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்திருக்கும். ஒருவேளை 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ், தேமுதிகவை ஆதரித்தாலும் கூட திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கும். ஆனால் தற்போது பாமக கைவிட்டுவிட்ட நிலையில் இது ஒருவகையில் கனிமொழிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. இதனால் காங்கிரஸ் தயவையே இரு கட்சிகளும் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.
5 ஆண்டுகாலத்துக்கும் முழுமையாக ஆதரவு தராததால் திமுக மீது காங்கிரஸ் தலைமை கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படியே தேமுதிகவை காங்கிரஸ் ஆதரித்தால் அதிமுக வசம் இருக்கும் தேமுதிகவின் அதிருப்தி எம்.எல்.ஏக்களே வெற்றி- தோல்வியை தீர்மானிக்கக் கூடியவர்களாக இருப்பர். காங்கிரஸ் முடிவைப் பொறுத்தே தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்களை அதிமுக களம் இறக்கும் என்றும் கூறப்படுகிறது. காங்கிரசின் முடிவு நாளை அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு!












Click it and Unblock the Notifications