Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது எங்களின் மறுபிறவி... தமிழகம் திரும்பிய பக்தர்கள் கண்ணீர் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: உத்தரகண்ட் மாநில வெள்ளத்தில் சிக்கி மீண்டு வந்தது எங்களின் மறுபிறவி என்று சென்னை திரும்பிய பக்தர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.

இமாலய சுனாமி என்று வர்ணிக்கப்படும் வெள்ளத்திற்கு உத்தகண்ட் மாநிலத்தில் உள்ள புனித தலங்களாக கேதார்நாத், பத்ரிநாத், ரிஷிகேஷ் ஆகிய இடங்கள் சிதைந்து போயுள்ளன. இங்கு புனிய யாத்திரை சென்ற பக்தர்கள் ஆங்காங்கே சிக்கித் தவிக்கின்றனர்.

தமிழகத்தில் இருந்து யாத்திரை சென்ற பக்தர்கள் படிப்படியாக மீட்கப்பட்டு டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். உத்தரகாண்ட் சென்றுள்ள தமிழக சிறப்புக் குழு, வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

We are reborn, said rescuded TN devottees

வெள்ளிக்கிழமையன்று 103 பேர் திரும்பிய நிலையில் டெல்லி வந்தவர்களில் 3வது நாளாக 74 பேர் இன்று விமானம் மூலம் சென்னை திரும்பினர். விமானநிலையம் வந்த பக்தர்களை அவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பக்தர்கள் தங்களை பத்திரமாக மீட்ட தமிழக அரசுக்கு நன்றி கூறினர். கேதார்நாத்தில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பும் வழியில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக அவர்கள் கூறினர். சொந்த ஊருக்கு திரும்புவோமா? என்று நினைத்த நேரத்தில் எப்படியோ மீண்டு வந்துள்ளோம் இது எங்களின் மறுபிறவி என்று அவர்கள் கூறினர்.

விழுப்புரம் பக்தர்கள்

இதனிடையே விழுப்புரத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்ற 37 பேரில், ஒரு பெண் உட்பட 2 பேர் உத்தர்காண்டின் மழை வெள்ளத்துக்கு பலியாகிவிட்டனர்.

இறந்தவர்களின் உறவினர்களுக்கு இந்த தகவல் தொலை பேசி வாயிலாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மீதமுள்ளவர்களில் 20 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வந்தடைந்தாலும் அவர்களில், 19 பேர் மட்டுமே டெல்லிக்கு வந்து சேர்ந்துள்ளனர். தப்பிய 20 பேரில் ஒருவரான குருமூர்த்தி என்பவர், வெள்ளப் பகுதியில் சிக்கித் தவிக்கும் 15 பேரில் தனது மனைவியும் ஒருவர் என்பதால், அவர் உத்தர்காண்டிலேயே தங்கியிருப்பதாக டெல்லி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்டில் இன்னும் 30 ஆயிரம் பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் தமிழர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+