மில் ஓனர் மகளை பலமுறை கெடுத்ததாக கேரள மாஜி அமைச்சர் மீது புகார்

கேரளாவில் கடந்த இடது முன்னனி ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் ஜோஸ் தெற்றியல். ஜனதா கட்சியை சேர்ந்த இவர் தற்போது அங்க்மாலி தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். இவரது மகன் ஆதர்ஷ். அங்கமாலி அருகேயுள்ள மஞ்சப்ரா பகுதியை சேர்ந்த 30 வயது இளம் பெண் ஆலுவா எஸ்பியிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
அங்கமாலியில் எனது தந்தை மரம் அறுப்பு மில் நடத்தி வருகிறார். இந்த மில்லை முன்னாள் அமைச்சர் ஜோஸ் தெற்றியல் திறந்து வைத்தார். அதன் பிறகு அவர் எனது தந்தையைப் பார்க்க மில்லுக்கு வருவார். அப்போது என் செல்போன் எண்ணை வாங்கி சென்றவர் அடிக்கடி போன் செய்வார்.
இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டில் என்னை ஜோஸ் தெறறியல் அவரது மகன் ஆதர்ஷ்க்கு திருமணம் செய்ய எண்ணினார். அதற்கு நானும் சம்மதித்தேன். இதையடுத்து ஆதர்ஷ் என்னை வீட்டுக்கு அழைத்து சென்று பலமுறை பலத்காரம் செய்தார்.
கடந்த ஆண்டு ஜோஸ் தெற்றியல் ஆலுவாலில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வைத்து என்னை பலத்காரம் செய்தார். எனவே ஜோஸ் தெற்றியல் மற்றும் அவரது மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் புகார் மனுவுடன் ஜோஸ் தெற்றியல் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அடங்கிய சிடியையும் கொடுத்துள்ளார். இதையடுத்து ஆலுவா போலீசார் தந்தை, மகன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications