வெள்ளத்தால் நிலை குலைந்த உத்தரகண்டிற்கு வாரி வழங்கிய பெருந்தகைகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்திற்கு மாநில முதல்வர்கள், தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் நிவாரண உதவி அளித்துள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கன மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும் ஆங்காங்கே நிலச் சரிவும் ஏற்பட்டது. இதில் 5.000 பேர் பலியாகி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் 10,000 பேர் பல்வேறு இடங்களில் சிக்கியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

வெள்ளத்தால் நிலை குலைந்துபோன உத்தரகண்ட் மாநிலத்திற்கு பல்வேறு மாநில முதல்வர்கள், தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் நிவாரண நிதி வழங்கியுள்ளன.

சிஆர்பிஎப்

சிஆர்பிஎப்

மத்திய ரிசர்வ் படை போலீசார் உத்தரகண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.18 கோடி அளித்துள்ளனர்.

நிதிஷ் குமார்

நிதிஷ் குமார்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி அளித்துள்ளார்.

நவீன் பட்நாயக்

நவீன் பட்நாயக்

ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்திற்கு ரூ.5 கோடி அளித்துள்ளார்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரகண்ட் மாநிலத்திற்கு ரூ. 5 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

ஜின்டால் ஸ்டீல் அன்ட் பவர்

ஜின்டால் ஸ்டீல் அன்ட் பவர்

ஜின்டால் ஸ்டீல் அன்ட் பவர் லிமிடெட் உத்தரகண்டிற்கு ரூ.5 கோடி நிதி அளித்துள்ளது.

மோடி

மோடி

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உத்தரகண்டிற்கு ரூ.2 கோடி நிதி அளித்துள்ளார்.

அமெரிக்கா

அமெரிக்கா

உத்தரகண்ட் நிவாரண நிதிக்கு அமெரிக்கா ரூ.90 லட்சம் நிதியுதவி வழங்குவதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி ஜே பவல் தெரிவித்துள்ளார்.

சத்ருகன் சின்ஹா

சத்ருகன் சின்ஹா

இந்தி நடிகரும், பாஜக தலைவருமான சத்ருகன் சின்ஹா உத்தரண்ட் மாநிலத்திற்கு ரூ.50 லட்சம் நிதி அளித்துள்ளார்.

திமுக

திமுக

உத்தரகண்ட் மாநிலத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளது.

பவன் கல்யாண்

பவன் கல்யாண்

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் உத்தரகண்டிற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

விஜயகாந்த்

விஜயகாந்த்

உத்தரகண்ட் மாநில நிவாரண நிதிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரூ.10 லட்சம் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+