68 வயது பாட்டியை விரட்டி வீட்டுக்கு 'சீல்' வைத்த சரக்கு காஞ்சனா, கஞ்சா ராணி, அரவாணி சுஜி!
சென்னை: ரூ. 60,000 கடன் வாங்கி விட்டு கட்ட முடியாமல் தவித்த மூதாட்டியை அடித்து விரட்டி விட்டு அவருக்குச் சொந்தமான வீட்டைப் பூட்டி சீல் வைத்து அடாவடி செய்த 2 பெண்களையும், ஒரு அரவாணியையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை அருகே செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் 68 வயதான மும்தாஜ் பேகம். இவரது கணவர் இறந்து விட்டார். மும்தாஜ் பேகத்திற்கு 2 மகள்கள் உள்ளனர். திருமணத்திற்காக இவர் தனது வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து ராஜம் என்ற பெண்ணணிடம் ரூ. 60,000 கடன் வாங்கினார். ஆனால் அதைத் திருப்பித் தர முடியாமல் தவித்துள்ளார்.
இதைப் பயன்படுத்திக் கொண்ட ராஜம், பேசாமல் வீட்டை எழுதிக் கொடுத்து விடு என்று கூறி மும்தாஜ் பேகத்தை மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்தார் மும்தாஜ் பேகம். போலீஸார் இரு தரப்பையும் நேரில் அழைத்து, 3 மாதம் அவகாசம் தருவதாகவும், அதற்குள் மும்தாஜ் பேகம் வாங்கிய பணத்தைக் கொடுத்து விட வேண்டும். அதற்கு மேலும் தாமதமானால் கோர்ட்டுக்குப் போய் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று சமாதானப்படுத்தித அனுப்பி வைத்தனர்.
ஆனால் ராஜம் நேராக ஒரு ரவுடிக் கும்பலிடம் போனார். அதுவும் பெண் ரவுடிகளாம். அதில் ஒருவர் சரக்கு காஞ்சனா, இவர் ஒரு கள்ளச்சாராய வியாபாரி. இன்னொருவர் கஞ்சா வியாபாரி ராணி. இன்னொருவர் அரவாணி சுஜி.
எப்படியாவது மும்தாஜை விரட்டி விட்டு விட்டு வீட்டை கைப்பற்றித் தருமாறு அவர்களிடம் கூறினார். இதையடுத்து இந்த மூன்று தாதிகளும் மும்தாஜ் வீட்டுக்குச் சென்று அவரையும் வீட்டில் இருந்தவர்களையும் அடித்து விரட்டி வெளியேற்றினர். பின்னர் வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய் விட்டனர்.
இதையடுத்து செம்மஞ்சேரி போலீஸில் புகார் கொடுத்தார் மும்தாஜ் பேகம். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications