'பிக் பிரதர்'... முதல் ஆளாக கவர்ச்சி மாடல் சல்லி வெளியேற்றம்!
லண்டன்: பிரபலமான பிக் பிரதர் ரியாலிட்டி ஷோவிலிருந்து முதல் நபராக கவர்ச்சி மாடல் அழகியான சல்லி வெளியேற்றப்பட்டுள்ளார்.
இவரை வெளியேற்றக் கோரி பெருமளவில் வாக்குகள் விழுந்ததால் சல்லி அப்செட்டாகி வெளியேறியுள்ளார்.
உலக அளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றுதான் இந்த பிரதர். லண்டனின் சேனல் 5 நிறுவனம் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.

ஷில்பாவுக்கு பெயர் தந்தது
இதில் கலந்து கொண்டுதான் இந்தியாவின் ஷில்பா ஷெட்டி உலகப் புகழ் பெற்றார். இனவெறி வசைபாடுதலுக்கும் ஆளானார்.

2013 ஷோ
தற்போது இந்த ஆண்டுக்கான ஷோ தொடங்கி நடந்து வருகிறது.

முதல் ஆளாக சல்லி அவுட்
இதில் பிக் பிரதர் வீட்டிலிருந்து முதல் நபராக கவர்ச்சிகரமான மாடல் அழகியான சல்லி வெளியேற்றப்பட்டுள்ளார்.

நேயர்களின் ஏகோபித்த எதிர்ப்பு
நேயர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புகளை சம்பாதித்தபடி வெளியேறியுள்ளார் சல்லி.

ரொம்ப ஷாக்காகிட்டேன்
வீட்டை விட்டு வெளியே வந்தபோது நான் நன்றாக இருக்கிறேன் என்றுதான் கூறினார் சல்லி. ஆனால் அதன் பிறகு அவர் கூறுகையில், எனக்கு இது அதிர்ச்சியாக இருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றார் அதிருப்தியுடன்.

சந்தோஷமான நாட்கள்
பிக் பிரதர் வீட்டில் இருந்த ஒரு வாரமும் எனக்கு நல்ல நாட்களாக அமைந்தது. நிறைய கற்றுக் கொண்டேன். மக்களை எப்படி கணிப்பது என்பதும் அதில் ஒன்று என்றார் சல்லி.












Click it and Unblock the Notifications