பயங்கரவாதத்தை வேரறுப்போம். ஸ்ரீநகரில் மன்மோகன் சிங் பேச்சு

ஜம்மு காஷ்மீருக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மன்மோகன்சிங்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் வருகை தந்துள்ளனர். முன்னதாக நேற்று தீவிரவாத இயக்கத்தினர் திடீர் தாக்குதலை நடத்தியதில் 8 ராணுவத்தினர் பலியாகினர். ஸ்ரீநகர் வந்த மன்மோகன்சிங்கும் சோனியாவும் 8 ராணுவத்தினருக்கும் இரங்கல் தெரிவித்தனர்.
பிரதமர் மன்மோகன்சிங்
இந்நிலையில் ஸ்ரீநகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், பயங்கரவாதத்தை ஒட்டு மொத்த நாடும் ஒன்றுபட்டு எதிர்ப்போம். பயங்கரவாத அச்சுறுத்தலை, ஒட்டு மொத்த இந்திய மக்களும் ஒருங்கிணைந்து எதிர்த்துப் போராடுவோம். பயங்கரவாதத்தை ஒரு போதும் வெற்றியடைய விட மாட்டோம். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது என்றார்.
சோனியா பேச்சு
ஜம்மு காஷ்மீரில் 850 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய ராட்டில் மின் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி பேசிய சோனியா காந்தி, மாநிலத்தின் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ளும் போது, இயற்கை வளங்களைக் காக்கவும் கவனம் செலுத்த வேண்டும். மின் உற்பத்தி திட்டத்துக்காக பொதுமக்களின் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நிலத்தை கொடுத்த பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும். மேலும், இந்த மின் உற்பத்தி மையத்தால் உள்ளூர் மக்களும் பயனடைவார்கள் என்றார்.
முழு அடைப்பு
இதனிடையே பிரதமர் மன்மோகன்சிங்கின் வருகையைக் கண்டித்து காஷ்மீரில் ஹூரியத் உள்ளிட்ட அமைப்புகள் முழு அடைப்பு நடத்தியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications