உத்தரகண்டில் வெளுத்து வாங்கும் மழை: 10,000 பேர் தவிப்பு
டேராடூன்: உத்தரகண்டில் கன மழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 10,000 பேர் மலைப் பகுதிகளில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 5,000 பேர் பலியாகியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முதல் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மலைப் பகுதிகளில் சுமார் 10,000 பேர் தங்களை மீட்க ஆளின்றி தவித்து வருகின்றனர்.

விடிய விடிய மழை
ரிஷிகேஷ், டேராடூன், ஹர்சில், கங்கோத்ரி மற்றும் உத்தரகாசியில் விடிய விடிய மழை பெய்தது.

மேலும் மழை
அடுத்த 72 முதல் 96 மணிநேரம் வரை உத்தரகண்டில் மேலும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கேதர்நாத்தில் 3 நாட்களுக்கு மழை
ஏற்கனவே வெள்ளத்தால் சீர்குலைந்துள்ள கேதர்நாத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்ரிநாத்தில் யாத்ரீகர்கள் தவிப்பு
பத்ரிநாத்திலும் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மலைப் பகுதியில் சிக்கியுள்ள 5,000 யாத்ரீகர்களில் 164 பேர் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஹர்ஷில், மனேரி மற்றும் பத்வாரி பகுதிகளில் இருந்து 830 பேர் தாராசு பகுதிக்கு இடம் பெயர வைக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications