ரூ.4 லட்சம் கோடியை வரி பாக்கியை வசூலிக்காமல் என்.எல்.சி. பங்குகளை விற்பதா?- விஜயகாந்த் கேள்வி

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என்.எல்.சி 5 சதவிகித பங்குகளை விற்று 466 கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அரசின் நிதி நிலையை ஈடுகட்ட இம்முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஆனால், என்.எல்.சி உற்பத்தி செய்யும் மின்சாரத்தை பெருமளவு தமிழ்நாடு நம்பி இருக்கிறது. இன்று 5 சதவிகிதம் பங்குகள் என்று ஆரம்பித்து படிப்படியாக அரசின் பொது நிறுவனமான என்.எல்.சி. நிறுவனம் தனியார் மயமாக்கப்படுமானால், தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வதற்கு வழி உண்டு.
இந்திய அரசின் இந்த முயற்சியை எதிர்த்து என்.எல்.சி. தொழிலாளர்களும், அதிகாரிகளும் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். பொதுத்துறையை தனியார் மயமாக்கும் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்திய அரசின் இந்த முயற்சியை கைவிடவேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் கேட்டுக்கொண்டும், இதை உதாசீனப்படுத்துவது இந்திய அரசுக்கு நல்லதல்ல. அமைச்சர் நாராயணசாமி அரசியல் காரணங்களுக்காக இதை எதிர்ப்பதாகக் கூறுவது வேண்டுமென்றே திரித்துக் கூறுவதாகும்.
சுமார் 10 லட்சம் மோடி ரூபாய்க்கு மேல் வரவு, செலவு செய்யும் இந்திய அரசுக்கு 466 கோடி ரூபாய் ஒரு பெரிய தொகை அல்ல. மேலும், இந்திய அரசின் சார்பில் அரசுக்கு வரவேண்டிய வரி பாக்கியே 4 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் என்று இன்று அறிக்கை வந்துள்ளது. அந்த வரி பாக்கியை ஒழுங்காக வசூலித்தாலே, இந்திய அரசின் நிதிநிலை எவ்வளவோ மேம்பாடு அடைந்திருக்கும். வரி பாக்கி வைத்திருப்பவர்கள் வசதியுள்ளவர்களே தவிர, ஏழைகள் அல்ல. பணக்காரர்களிடம் இருந்து பெற வேண்டிய வரியை வசூலிக்க தவறிவிட்டு, என்.எல்.சி. போன்ற பொது நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது என்ன நியாயம்? ஆகவே, நெய்வேலி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சியை இந்திய அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications