ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகை, சிஐஏ அலுவலகம் மீது தாலிபான்கள் தாக்குதல்
காபூல்: ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தாலிபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
தாலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முன்வந்ததற்கு ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு காபூலில் உள்ள அதிபர் மாளிகையின் கிழக்கு வாசலை தாலிபான் தீவிரவாதிகள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் கர்சாயின் மெய்காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.
பலத்த பாதுகாப்பு உள்ள அதிபர் மாளிகை பகுதியில் சுமார் 1 மணிநேரம் துப்பாக்குச்சூடும், தொடர் குண்டுவெடிப்பு சப்தங்களும் கேட்டுள்ளன. இந்நிலையில் இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக தீவிரவாதிகள் சிஐஏ அலுவலகத்தையும் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், "இன்று காலை 6.30 மணிக்கு தியாகிகள் சிலர் அதிபர் மாளிகை, பாதுகாப்பு அமைச்சம் மற்றும் ஏரியானா ஹோட்டல் ஆகியவற்றை தாக்கினர்" என்று தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.
இந்த தாக்குதல் நடந்தபோது கர்சாய் மாளிகையில் இருந்தாரா என்பது தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications