அமெரிக்க வங்கியின் அறிவிப்பால் 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்த தங்க விலை
சிங்கப்பூர்: கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
அமெரிக்க பொருளாதாரம் தற்போது மெதுவாக சரிவில் இருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க ரிசர்வ் வங்கி பிற நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதை நிறுத்திக் கொள்வதாக கடந்த புதன்கிழமை அறிவித்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் அமெரிக்க அரசு நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டத் துவங்கிவிட்டனர். இதனால் தங்கத்தின் தேவை வெகுவாகக் குறைந்துள்ளது.
உலக பொருளாதாரம் மந்த நிலையை அடைந்தவுடன் மக்கள் தங்கத்தில் ஓடி, ஓடி முதலீடு செய்ததால் அதன் விலை விண்ணைத் தொட்டது. தற்போது தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதால் அதன் விலையும் சரிந்து கொண்டிருக்கிறது.

3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இந்த வாரத் துவக்கத்தில் இருந்து ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 10 சதவீதம் குறைந்துள்ளது.

தங்கத்திற்கு கிராக்கி இல்லை
கடந்த ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் விலை 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தபோது ஆசியாவில் இருந்த அதிக கிராக்கியால் இழப்பீடு சரி செய்யப்பட்டது. ஆனால் தற்போது தங்கத்தின் தேவை குறைந்துவிட்டது.

இந்தியாவிலேயே தங்கத்தின் தேவை குறைந்தது
ஷாங்காய் கோல்டு பியூச்சர்ஸ் வர்த்தகத்தில் இன்று தங்கத்தின் விலை 3 சதவீதம் சரிந்துள்ளது. தங்கத்தை மக்கள் வாங்குவதை குறைக்கும் நோக்கத்தில் மத்திய அரசு விதித்துள்ள புதிய விதிமுறைகளால் இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஆபரணத் தங்க நிலவரம்
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.2,481க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.19,848க்கும் விற்பனையாகிறது. மேலும் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.49 குறைந்து ரூ.2,653க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியும் குறைந்தது
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.30 குறைந்து ரூ.42.90க்கும், கிலோவுக்கு ரூ.1,195 குறைந்து ரூ.40,000க்கும் விற்பனையாகிறது.
-
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications