விபத்தில் மூளைச்சாவு அடைந்த 6 வயது சென்னை சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்
சென்னை: சென்னையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 6 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
சென்னை போரூரை அடுத்து உள்ள காரம்பாக்கம் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் லேப் டெக்னீஷியன் மதன்(30). அவரது மனைவி கோமதி. அவர்களின் மகன்கள் அனீஷ் குமார் (6), விகேஷ் குமார் (4). இதில் அனீஷ் வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 1ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதன் தன் மனைவி, மகன்களோடு எழும்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு நேரத்தில் ஹாரிங்டன் சாலையில் வந்தபோது திடீர் என்று நாய் ஒன்று சாலையின் குறுக்கே ஓடியது. இதையடுத்து மதன் பிரேக் போட பைக் நிலை தடுமாறி கீழே விழுந்தது. அப்போது பைக்கில் இருந்த அனைவரும் கீழே விழுந்தனர். இதில் அனைவருக்கும் காயம் ஏற்பட்டது.
அனீஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தான். உடனே அவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். அங்கு நேற்று இரவு சிறுவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவனது பெற்றோர் தீர்மானித்தனர். அனீஷின் கண்கள், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு ராயபேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் வழங்கப்பட்டன.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications