'பதம் பார்க்கும்' சிக்கன் விலை… ஹோட்டல்களில் பிரியாணி விலை உயர்வு!!
சென்னை: சென்னையில் கறிக்கோழிக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக ஹோட்டல்களில் சிக்கன் பிரியாணி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் கடந்த சில வாரங்களாகவே கறிக்கோழி எனப்படும் பிராய்லர் கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோழிக்கறியின் விலை மளமள வென உயர்ந்தது. மே மாத இறுதியில் 1 கிலோ கோழிக்கறி ரூ.160க்கு விற்கப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து தற்போது 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கோழி தட்டுப்பாடு காரணமாக மட்டன், மீன் விலையும் உயர்ந்துள்ளது.

பிரியாணி விலை உயர்வு
இதனால் அசைவ ஓட்டல்களுக்கு போதிய அளவு மட்டன்-சிக்கன் கிடைக்காததால் உணவு வகைகளின் விலை உயரத் தொடங்கி விட்டது. 1/2 பிளேட் பிரியாணி ரூ.90-ல் இருந்து ரூ.100ஆக உயர்ந்துள்ளது. முழு பிளேட் பிரியாணி ரூ.180-ல் இருந்து ரூ.200ஆகி விட்டது. இதேபோல் தந்தூரி, சில்லி சிக்கன் உள்பட அனைத்து வகை கோழிகறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளது.
சாலையோர கடைகளில் கால் பிளேட் சிக்கன் பிரியாணி இதற்கு முன்பு ரூ.45-க்கு கிடைத்தது. ஆனால் இப்போது 10 ரூபாய் உயர்ந்து 55 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கோழி விலை உயர்ந்துள்ளதால் நாங்களும் விலை உயர்த்த வேண்டி உள்ளது என்று ஹோட்டல் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். கறிக்கோழி தவிர பிரியாணிக்கு தேவைப்படும் தக்காளி, இஞ்சி போன்ற பொருட்களின் விலையும் அதிகமாகி விட்டதால் பிரியாணி விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி விட்டதாக அவர்கள் கூறினர்.
பிரியாணியின் தரம்தான் எங்களுக்கு முக்கியம். அதனால் தரத்தை குறைக்காமல் வழங்குவதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பிரியாணி வாங்குகிறார்கள். 10 ரூபாய் அதிகம் என்றாலும் அதை யாரும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.
பிரியாணி விலை உயர்ந்தாலும் பிரியாணி கடைகளில் கூட்டம் குறைய வில்லை. எப்போதும்போல் வியாபாரம் நடைபெறுகிறது.
சிக்கன், மட்டன், மீன் விலை உயர்வு காரணமாக அசைவப்பிரியர்கள் பாடுதான் திண்டாட்டமாகியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications