நீலகிரியில் கனமழை: மலை ரயில் நிறுத்தம்… பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கடந்த 10 ஆண்டுகளுக்கு பின் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை குறித்த காலத்தில் தொடங்கியதையடுத்து பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவலாஞ்சியில் அதிக அளவாக 254 மி.மீ மழை பெய்துள்ளது.
கூடலூரில் வீடுகள் சேதம்
கூடலூர் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக மழைப்பொழிவு அதிகமாக இருப்பதால், கூடலூரை அடுத்த 2-ஆவது மைல் பகுதிக்கு உள்பட்ட தட்டக்கொல்லி குடியிருப்புப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 30 வீடுகள் சேதமடைந்தன. தொடர்ந்து அப்பகுதியில் நிலச்சரிவு அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 955 மி.மீ. மழை பதிவாகியுள்ளது இதைத்தொடர்ந்து, வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையால் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு அபாயம் இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மலை ரயில் நிறுத்தம்
மழையினால் சாலைகள் சேதமடைந்துள்ளன. மலை ரயில் பாதையில் லாரி கவிழ்ந்துள்ளதால் இன்று காலை முதல் உதகமண்டலம் மழை ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.
வால்பாறை மிதக்கிறது
கோவை மாவட்டம், வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவுமுதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
சிலோன் காலனி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 2 வீடுகளும், காமராஜர் நகர் பகுதியில் ஒரு வீடும் சேதமடைந்தன. புதிய பஸ் நிலையம் அருகே நல்லகாத்து எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தை மழைநீர் சூழ்ந்தது. அப்பகுதியில் இருந்த பல குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கின.
நிரம்பும் நீர்த்தேக்கங்கள்
தமிழக-கேரள எல்லையையொட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை நீர்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முக்காலி, பரணி, முல்லி வன நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நீர் அவலாஞ்சி, எமரால்டு நீர்த்தேக்கங்களில் கலந்துவிடுவதால், நீர்வரத்து அதிகரித்து நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
தெங்குமரஹாடா வனத்திலும் கனமழை பெய்து வருவதால் மோயாற்று வெள்ளமும் பவானிசாகர் அணையில் கலப்பதால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒன்றரை அடி உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 12 ஆயிரத்து 249 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 51.54 அடியாக உயர்ந்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications