ராஜ்யசபா தேர்தல்..திமுகவுக்கு நிம்மதி கிடைத்தது! ஆதரவளிப்பதாக அறிவித்தது காங்கிரஸ்!!
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கப் போகிறதோ என்ற தவிப்பில் தத்தளித்த திமுகவுக்கு அப்பாடா என்ற நிம்மதி கிடைத்திருக்கிறது. ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழியை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் வெளியிட்ட அறிக்கையில், வருகிற ஜூன் 27- ந் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர் கனிமொழியை ஆதரிப்பதென்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருக்கிறது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் 5 சட்டசபை உறுப்பினர்களும் கனிமொழிக்கு தங்களது வாக்கினை அளிப்பார்கள். இந்தத் தகவலை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழகத்தின் பொறுப்பாளராக இருக்கின்ற முகுல் வாஸ்னிக் தொலைபேசியில் தெரிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ஆதரவு அறிவிப்பால் திமுக நிம்மதி அடைந்தாலும் கழற்றிவிடார்களே! என்ற ஆதங்கத்திலும் அதிருப்தியிலும் தேமுதிக இருக்கிறது!












Click it and Unblock the Notifications