மகாராஷ்டிர பாஜக தலைவர்களுடன் மோடி சந்திப்பு- கத்காரி புறக்கணிப்பு! உத்தவ் உடன் ஆலோசனை!!
மும்பை: லோக்சபா தேர்தலுக்கு வியூகம் வகுப்பதற்காக மகாராஷ்டிரா மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர்களுடன் குஜராத் முதல்வரும் பாஜகவின் தேசிய பிரசாரக் குழுத் தலைவருமான நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.
கோவாவில் நடைபெற்ற பாஜகவின் செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் லோக்சபா தேர்தலுக்கான தேசிய பிரசாரக் குழுத் தலைவராக மோடி நியமிக்கப்பட்டார். பின்னர் அண்மையில் டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் உத்தர்காண்ட் மாநிலத்தில் பாஜகவினரை இணைத்து பெருவெள்ளத்தால் சிக்கியோரை மீட்கும் பணிகளை முடுக்கிவிட்டிருந்தார்.
பின்னர் பஞ்சாப் மாநிலத்தில் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கினார். இதைத் தொடர்ந்து மகராஷ்டிரா மாநில பாஜகவினருடன் மோடி இன்று ஆலோசனை நடத்தினார் .மும்பையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர், பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டே, மாநில பாஜக தலைவர் தேவேந்திர பாதன்விஸ், மகாராஷ்டிர மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஏக்நாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஆனால் பாஜகவின் முன்னாள் தலைவர் நிதின் கத்காரி இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
உத்தவ் தாக்கரேயுடன் சந்திப்பு
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து மோடிக்கு எதிராக அவ்வப்போது எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிற சிவசேனையின் தலைவர் உத்தவ் தாக்கரேவையும் மோடி சந்தித்தார். அத்வானிக்கு ஆதரவாக சிவசேனை செயல்படுவதாக கருதப்படும் நிலையில் அக்கட்சியின் தலைவரை நரேந்திர மோடி நேரில் சென்று சந்தித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications