டெல்லி அருகே ஓடும் காரில் 2 பெண்கள் பலாத்காரம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி அருகே குர்கானில் ஓடும் காரில் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் அருகே உள்ள செயற்கைக்கோள் நகரமான குர்கானில் ஒருமணி நேர இடைவெளியில் ஓடும் காரில் இரண்டு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் புதன்கிழமையன்று மெக்ரோலி - குர்கான் சாலையில் இருந்த விடுதி ஒன்றின் வாசலின் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களின் அருகில் வந்த காரில் டெல்லிக்கு செல்வதற்கு லிப்ட் கேட்டு ஏறியுள்ளனர். காரில் இருந்த டிரைவர் அந்த பெண்களை ஏற்றிக் கொண்டார்.

காரினுள் ஏற்கனவே இரண்டு ஆண்கள் இருந்தனர். அப்போது கார் நகரத் தொடங்கியதும் அந்தப் பெண்களிடம் அவர்கள் சில்மிசம் செய்துள்ளனர். காரை நிறுத்துமாறு கூறியும், வேகமாக கார் சென்றுள்ளது. இதனால் அந்தப் பெண்கள் சத்தம் போட்டுள்ளனர்.

அப்போது அவர்களை அடித்து துன்புறுத்தியதோடு இரண்டு பெண்களையும் ஓடும் காரிலேயே பலாத்காரம் செய்துவிட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.

பெண்கள் இருவரும் இது குறித்து குர்கான் போலீசில் புகார் தெரிவித்தனர். மருத்துவப்பரிசோதனையில் அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டது உண்மை என்பது தெரியவந்துள்ளது.

தப்பியோடிய மூவரையும் குர்கான் போலீசார் தேடிவருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவமாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். இதன்பின்னர் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. டெல்லியில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் டெல்லி அருகிலேயே இரண்டு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பலத்த அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+