ராஜ்யசபா தேர்தல் வாக்குப் பதிவை தொடங்கி வைத்த ஜெயலலிதா!

தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. சட்டசபை குழுக்கள் கூடும் கூட்ட அறையில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது. 6 எம்.பி. இடங்களுக்குப் போட்டியிடும் 7 வேட்பாளர்களுக்கும் தனித்தனி வாக்குப் பகுதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
கட்சி ஏஜெண்டுகள்
இத்தேர்தலில் ஒவ்வொரு கட்சிக்கும் ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. சார்பில் செம்மலை, தி.மு.க சார்பில் கம்பம் ராமகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் ஜான் ஜேக்கப், தே.மு.தி.க சார்பில் வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பாக்கியம், மனித நேய மக்கள் கட்சி சார்பில் கம்சுதீன், புதிய தமிழகம் கட்சி சார்பில் வக்கீல் பாஸ்கர் மதுரம், பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் முத்துராமலிங்கம் ஆகியோர் கட்சிகள் சார்பிலான ஏஜெண்டுகளாக இருந்தனர்.
வாக்குச் சாவடி ஏஜெண்டுகள்
இத்தேர்தலில் வாக்குச்சாவடி ஏஜெண்டுகளாக அ.தி.மு.க சார்பில் தம்பித்துரை, சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், தி.மு.க. சார்பில் எ.வ.வேலு, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆறுமுகம் ஆகிய 4 பேர் அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு எல்.எல்.ஏயும் தாங்கள் யாருக்கு வாக்களித்துள்ளோம் என்பதை ஏஜெண்டிடம் காண்பித்தனர்.
இந்த வாக்குப் பதிவு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் முன்னிலையில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 9 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கினாலும் சுமார் 11.30 மணிக்குப் பின்னர்தான் வாக்குப் பதிவு நடைபெற்றது.
ஜெயலலிதா வாக்களிப்பு
சுமார் 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா தமது வாக்கைப் பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து அதிமுக, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என வாக்களித்தனர். அ.தி.மு.கவைச் சேர்ந்த 151 எம்.எல்.ஏக்களும் தலா 34 எம்.எல்.ஏக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர். இந்த ஒவ்வொரு குழுவுக்கும் ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அனைவரும் அந்தந்த வேட்பாளருக்குத்தான் வாக்களித்தனரா என கண்காணிக்கப்பட்டனர்.
-
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications