தமிழக இளைஞர்கள் இருவரின் மரண தண்டனை ரத்து: குவைத் நீதிமன்றம் அதிரடி
துபாய்: குவைத்தில், கொலை குற்றம் சாட்டப்பட்ட, தமிழகத்தை சேர்ந்த இருவரின், மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அவர்களின் பெற்றோர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம், முத்துபேட்டையை சேர்ந்தவர் சுரேஷ், 30. கும்பகோணத்தை சேர்ந்தவர் காளிதாஸ், 32. இவர்கள் கடந்த, 2008ம் ஆண்டிலிருந்து, குவைத்தில் வேலை செய்து வருகின்றனர். கடந்த, 2008ல், இலங்கையை சேர்ந்த பாத்திமா என்ற பெண் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில், சுரேஷ், காளிதாஸ், இலங்கையை சேர்ந்த நித்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், நித்யாவுக்கு ஆயுள் தண்டனையும், சுரேஷ், காளிதாசுக்கு மரண தண்டனையும் அறிவிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 18ம் இவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. மரண தண்டனையிலிருந்து இவர்களை மீட்கும் படி இருவரது குடும்பத்தினரும், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை கேட்டிருந்தனர். இதற்கிடையே, இருவரது மரண தண்டனை தேதி, ஜூன்16ம் தேதியாக மாற்றப்பட்டது.
தூதரக அதிகாரிகளின் முயற்சியினால், பாத்திமா குடும்பத்துடன், தூதரக அதிகாரிகளும், குவைத் அதிகாரிகளும் பேசினர். உரிய இழப்பீட்டை அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டதால், சுரேஷ் மற்றும் காளிதாசின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் பாத்திமா குடும்பத்தினருக்கு, கணிசமான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதால், சுரேஷ் மற்றும் காளிதாசின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, குறைந்த பட்ச தண்டனை வழங்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மரணதண்டனை ரத்து செய்யப்பட்டதை அடுத்து சுரேஷ், காளிதாஸ் உறவினர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications