3,000 பேருடன் அமர்க்களமாக தொடங்கியது அமர்நாத் யாத்திரை
ஜம்மு: அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்கும் புனித பயணத்திற்கு முன்பதிவு செய்ய முதல் நாளான நேற்று மட்டும் சுமார் 12,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், இன்று காலை முதற்கட்டமாக சுமார் 3,000 பேர் ஜம்முவில் இருந்து தங்கள் புனித பயணத்தை தொடங்கியுள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகை கோவிலில் உள்ள பனி லிங்க தரிசனம் உலக பிரசித்தி பெற்ற வழிபாடாகும். இயற்கையாகவே பனிக் கட்டியால் உருவாகும் இந்த லிங்கத்தை தரிசிப்பதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம்.
இந்நாண்டிற்கான அமர்நாத் யாத்திரை இன்று தொடங்கியது.

முதல் யாத்திரை...
இன்று காலை ஜம்முவில் இருந்து புறப்பட்ட முதல் யாத்திரைக் குழுவில், 563 பெண்கள், 37 குழந்தைகள் உள்பட 3 ஆயிரத்து 157 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் பயணம் செய்ய சுமார் 96 தயார் செய்யப்பட்டுள்ளன. புனிதப் பயணம் தொடங்கியவர்களை காஷ்மீர் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் வாழ்த்தினார்.

எச்சரிக்கை...
யாத்திரையை சீர்குலைகும் வகையில் தீவிரவாத தாக்குதல் நிகழலாம் என உள்துறை அமைச்சகத்தின் எச்சரிக்கையால் ,புனிதயாத்திரைக் குழுவினருடன் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்புப் பணியில் உடன் சென்றுள்ளனர்.

தினமும் 15 ஆயிரம் பேர் தரிசனம்...
அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய தினமும் 15 ஆயிரம்பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்பதிவு...
முன்பதிவிற்கான முதல் நாளான நேற்று மட்டும் சுமார் 12,700 பேர் அமர்நாத் யாத்திரைக்காக பெயரைப் பதிவு செய்துள்ளனர்.

இரு வழிகள்...
இதில் 6,567 பேர் பால்டால் வழியாகவும் 6,150 பேர் பஹல்காம் வழியாகவும் அனுப்பப்படுகிறார்கள்.

இலவச உணவு...
யாத்ரிகர்களின் உணவுத் தேவைக்காக மானிகம், மிர் பஜார், பால்டால், நன்வான் பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சார்பாக யாத்ரிகர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக முகாம்கள்...
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான மருத்துவ முகாம்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், தாற்காலிக மருந்தகங்கள், உணவு, நீர் வசதிகளை மாநில அரசு செய்துள்ளது.

வயதுக் கட்டுப்பாடு...
இந்த வருடம், 13 வயது முதல் 75 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே அமர்நாத் புனித யாத்திரை செல்ல அனுமதிக்கப் படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு வயது பதிவு செய்பவர்களும் சரியான ஆரோக்கியச் சான்றிதல் சமர்பிக்க வேண்டியது கட்டாயம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications