4வது திருமணத்தை தடுத்த 3வது மனைவியை எரித்துக் கொன்ற கணவன்!
திருவாரூர்: நான்காவது திருமணத்தைத் தடுக்க முயன்ற மூன்றாவது மனைவியின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (34) ரியல் எஸ்டேட் தரகர் ஆவார்.
இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், ரோஜாபானு (25) என்பவரையும் சமீபத்தில் மூன்றாவதாக திருமணம் செய்து நாகப்பட்டினம் அருகே கூத்தூரில் வசித்து வந்தார்.
இந் நிலையில், மற்றொரு பெண்ணுடன் ராமச்சந்திரனுக்கு தொடர்பு ஏற்பட்டு, அவரை திருமணம் செய்ய முயற்சித்துள்ளார். இதை, ரோஜாபானு கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், ரோஜாபானுவின் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி, தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றார்.
அக்கம் பக்கத்தினர் ரோஜாபானுவை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி ரோஜாபானு இறந்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ராமச்சந்திரனை கைது செய்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications