இளம்பெண்ணை ஒரு வருடமாக மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

Subscribe to Oneindia Tamil

காங்கேயம்: திருப்பூர் அருகே இளம்பெண் செல்போனில் படம் எடுத்து அதனை காட்டி மிரட்டி அவரை பலமுறை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் என்ற மணி (வயது 33). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். ஒரு தனியார் ஆலையில் பாய்லர் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 20 வயதான ஒரு பெண் பாத்ரூமில் குளித்துக்கொண்டிருக்கும்போது, செல்போனில் அவருக்கு தெரியாமல் படம் பிடித்து மிரட்டினார்.

கடந்த ஒரு வருடமாக அந்த பெண்ணை மிரட்டிய ஈஸ்வரன், பல இடங்களுக்கு அழைத்துச் சென்று ஜாலியாக இருந்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அந்த பெண் கர்ப்பிணி ஆனாள். இதை அறிந்த ஈஸ்வரன் கருக்கலைப்பு மாத்திரையை வாங்கி அந்த பெண்ணுக்கு கொடுத்து கர்ப்பத்தை கலைத்ததாக தெரிகிறது.

ஒரு வருடமாக ஈஸ்வரன் பல முறை பலாத்காரம் செய்த காரணத்தினால் பாதிக்கப்பட்டாள் அந்த பெண். இந்த நிலையில், கடந்த 26ம் தேதி இரவு ஈஸ்வரன் மீண்டும் அந்த பெண்ணை உல்லாசமாக இருக்க வரும்படி மிரட்டினார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுத்ததால் ஈஸ்வரன் வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

இதனால் பயந்துபோன அந்த பெண் தனது தாயாரிடம் இதுபற்றி கூறினார். இதைத்தொடர்ந்து, காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈஸ்வரன் என்ற மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+