கமான், கிளாப்...: கைதட்டியே கின்னஸை முறியடித்த இளைஞர்!
லண்டன்: பொதுவாக மற்றவர்களை பாராட்டுவதற்கு கை தட்டுவது வழக்கம். ஆனால் அதிலும் சாதனை செய்ய முடியும் என நிரூபித்துள்ளனர் இரு இளைஞர்கள்.
கடந்த 2003ம் ஆண்டு, ஒரு நிமிடத்திற்குள் அதிகமுறை கை தட்டியவராக கின்னஸில் இடம் பிடித்தவர் கெண்ட் பிரெஞ்ச் என்ற இளைஞர்.
ஆனால், தற்போது இவரது சாதனையையும் முறியடித்துள்ளார் பிரையன் என்ற இளைஞர். இவர் ஒரு நிமிடத்தில் கிட்டத்தட்ட 802 முறை கைகளைத் தட்டியுள்ளார்.
ஆச்சர்யம் என்னவென்றால், தான் உலக சாதனை செய்கிறோம் என்ற விழிப்புணர்வு இல்லாமலேயே இவர் இந்தச் சாதனையை அரங்கேற்றி இருப்பது தான்.

பிரையனுக்காக கைதட்டுங்கள்...
லண்டனைச் சேர்ந்த பிரையன் பெட்னார்க் என்ற இளைஞர் சமீபத்தில் யூடியூப்-ல் தனது கைதட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதனை இதுவரை 5லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு களித்துள்ளனர்.

பழைய சாதனையை முறியடித்து...
இதற்கு முன்னர் கென்ட் என்பவர் தான் 2003ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி, அதிகமுறை அதாவது 721 முறை கை தட்டியதற்காக கின்னஸில் இடம் பெற்றவர். ஆனால், தற்போது அவரை விட 81 முறை அதிகமாக கைதட்டியுள்ளாராம் பிரையன்.

விளையாட்டு கின்னஸானது...
பிரையன் பெட்னர்க் என்ற இந்த இளைஞர் விளையாட்டாகத் தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். பிறகு தான் அதன் அருமை தெரிந்துள்ளது. தற்போது, இவர் கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications