திமுக தலைவர் கருணாநிதி மகள், மருமகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு!

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த வி. நெடுமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இம்மனுவின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம், தாழாம்பூர் கிராமத்தில் உள்ள 2.94 ஏக்கர் நிலத்துக்கான பொது அதிகாரம் தன்னிடம் இருப்பதாகவும், அந்த நிலத்தை விற்பனை செய்ய உள்ளதாகவும் செல்வியின் மருமகனான வி.எம். ஜோதிமணி கடந்த 2007-ஆம் ஆண்டு தெரிவித்தார். அந்த நிலத்தை வாங்க விரும்பிய நான், அதற்காக ரூ.3 கோடியே 50 லட்சத்தை முன்பணமாக ஜோதிமணியிடம் அளித்தேன்.
ஆனால், அதன் பின் அந்த நிலத்தை எனக்கு விற்பனை செய்ய ஜோதிமணி முன்வரவில்லை. என்னிடம் வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை. மாறாக, அந்த நிலத்தை வேறொருவரிடம் அவர் விற்பனை செய்து விட்டார் என்பது எனக்கு பின்னர் தெரிய வந்தது. இது தொடர்பாக நான் அளித்த புகாரில் ஜோதிமணி, செல்வி ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பல மாதங்களாகி விட்டது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இம்மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் காவல் துறையினர் 4 மாதங்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
உச்ச நீதிமன்றம் செல்வேன்.. இறுதியில் வெற்றி எனக்கே! நம்பிக்கையோடு சொன்ன இன்பதுரை -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications