டிவி சவுண்டைக் குறைக்க சொன்ன நண்பரைக் கொன்ற புரோட்டா மாஸ்டருக்கு 10 வருடம் சிறை
திருச்சி: டிவி பார்த்தபோது சத்தத்தைக் குறைக்க மறுத்த நண்பரை கட்டையால் அடித்துக் கொன்றபுரோட்டா மாஸ்டருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி துவாக்குடி வடக்குமலையில் உள்ள ஒரு ஹோட்டலில், உறையூர் இந்திராநகரை சேர்ந்த சஞ்சீவி (வயது 40), பெரம்பலூர் துறையூர் ரோடு அண்ணாநகரை சேர்ந்த பெரியசாமி என்கிற கண்ணன் (51) ஆகியோர் வேலை செய்து வந்தனர்.
குடும்பத்தில் உண்டான பிரச்சினை காரணமாக, சஞ்சீவியும், பெரியசாமியும் ஓட்டலிலேயே தங்கி இருந்தனர். இந்நிலையில் கடந்த 3.6.2012-ந்தேதி இரவு சஞ்சீவி ஓட்டலில் டி.வி. பார்த்து கொண்டு இருந்துள்ளார். அருகில் படுத்துத் தோங்கிக் கொண்டிருந்த பெரியசாமிக்கு இது இடையூறாக இருந்துள்ளது.
சத்தத்தைக் குறைக்கச் சொல்லி எடுத்துச் சொல்லியும் சஞ்சீவ் கேட்காத காரணத்தால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் பக்கத்தில் இருந்த கட்டையை எடுத்து அவரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார் சஞ்சய். இதில் சம்பவ இடத்திலேயே பெரியசாமி பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சஞ்சயை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி வேல்முருகன் கூறிய தீர்ப்பில், ‘குற்றம் சாட்டப்பட்ட புரோட்டா மாஸ்டர் சஞ்சீவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதம் விதித்தும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை ' என தீர்ப்பளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications