உத்தர்காண்ட் வெள்ள பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டும்: தேசிய பேரிடர் நிவாரண ஆணையம்
Subscribe to Oneindia Tamil
டேராடூன்: உத்தர்காண்ட் மாநிலத்தை உருக்குலைத்துப் போட்டிருக்கும் வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டும் என்று தேசிய பேரிடர் நிவாரண ஆணையத்தின் துணைத் தலைவர் சஷிதர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
உத்தர்காண்ட் மாநிலத்தை நிலைகுலையச் செய்த வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கானோரின் கதி என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில் அம்மாநில சபாநாயகர் கோவிந்த்சிங், வெள்ள பாதிப்புக்கு 10 ஆயிரம் பேர் பலியாகி இருக்கலாம் என்று கூறியிருந்தார். ஆனால் இதை மாநில அரசு மறுத்திருந்தது.

இதனிடையே டெல்லிய்ல் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பேரிடர் நிவாரண ஆணையத்தின் துணைத் தலைவர் சஷிதர் ரெட்டி, உத்தர்காண்ட் சபாநாயகர் கூறியதைப்போல் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டலாம். ஆனால், சரியான எண்ணிக்கையை தற்போது உடனடியாக உறுதியாக கூற முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications