வழக்குகள் மூலம் தேமுதிகவை முடக்க முடியாது: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

திருப்பூரில் கடந்த மே மாதம் தேமுதிக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, நிர்வாகிகள் ரவீந்திரன், இளங்கோ ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக திருப்பூர் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று நீதிபதி கணசேன் முன்பு பிரேமலதா உள்ளிட்டோர் ஆஜராகினர். அப்போது குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. விசாரணையை வரும் 30ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தேமுதிக மக்கள் பிரச்சினைக்காக எப்போதும் போராடும் கட்சியாகும். மக்கள் பிரச்சினைக்காக நீசிமன்றத்திற்கு வந்தது மகிழ்சியளிக்கிறது. ஆளும் கட்சியினர் வேண்டும் என்றே பொய் வழக்குகளை போட்டு வருகிறார்கள்.
இன்னும் எத்தனை வழக்குகள் போட்டாலும் மக்களுக்காக சந்திக்க தயாராக உள்ளோம். நாகர்கோவில் நீதிமன்றத்தில் கூட தலைவர் விஜயகாந்த் ஆஜரானார். அப்போது நடந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்டவர்கள் தேமுதிகவை சேர்ந்தவர்கள் தான். காவல்துறையினர் பாதிக்கப்பட்ட 3 பேரின் புகாரையும் வாங்க மறுத்துவிட்டனர்.
ஆனால் ஆளுங்கட்சியினர் புகார் கொடுத்தால் உடனடியாக பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கிறார்கள். இதையெல்லாம் பொதுமக்கள் பார்த்துக்
கொண்டுள்ளனர். தக்க சமயத்தில் பாடம் புகட்டுவார்கள். நீதிமன்றம், வழக்கு போன்றவைகளால் தேமுதிகவை முடக்கமுடியாது. மக்கள் பணி தொடர்ந்து நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications