அவதூறு வழக்கு: பிடிவாரண்டை ரத்து செய்ய விஜயகாந்த் மனு!

கேப்டன் டி.வி.யில் கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி பேட்டி கொடுத்த விஜயகாந்த், பத்திரிகைகளுக்கு ஜெயலலிதா விளம்பரங்களை அள்ளிக்கொடுத்து, லட்சக்கணக்கில் மக்கள் பணத்தை வீணடிப்பதாக கூறினார்.
பத்திரிகைகளை காக்கா பிடித்துக்கொண்டால்தான் அவரது முறைகேடுகள் வெளியிடப்படாமல் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து இந்த விளம்பரங்களை கொடுக்கிறார் என்று பேசினார்.
விஜயகாந்தின் பேச்சு, முதல்வர் ஜெயலலிதா மீது உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. எனவே, அவர் மீது அவதூறு குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று முதல்வர் ஜெயலலிதா தரப்பில் சென்னை நகர குற்றவியல் அரசு தலைமை வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், ஜூலை 1ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று விஜயகாந்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு நேற்று (1ஆம் தேதி) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, விஜயகாந்த்தோ, அவரது தரப்பிலோ வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், தன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், வேறு அவதூறு வழக்கில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜரானதால் சென்னை நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும் இதனால் தன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனு கூறியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications