7ம் வகுப்பு மாணவியை நண்பன் வீட்டில் வைத்து 4 நாள் கற்பழித்த நபர் கைது
டெல்லி: எத்தனை பேர் சேர்ந்து கத்தினாலும், போராடினாலும், ஆர்ப்பாட்டம் செய்தாலும் டெல்லியில் பலாத்காரங்களுக்கு இன்னும் ஓய்வில்லை. 7ம் வகுப்பு மாணவி ஒருவரை தனது நண்பன் வீட்டுக்குக் கடத்திச் சென்று அடைத்து வைத்து நான்கு நாட்கள் கற்பழித்துள்ளான் ஒரு கயவன்.
கல்யாண்புரியைச் சேர்ந்தவர் அந்த மாணவி. 16 வயதான அவரைத் திடீரென காணவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்தனர்.
போலீஸார் விசாரணை நடத்தியதில் 24 வயதான சந்தன் என்பவன் சிக்கினான். அவனை போலீஸார் விசாரித்தபோது, தனது நண்பன் வீட்டில் மாணவியை அடைத்து வைத்திருப்பதாக அவன் சொன்னான்.
இதையடுத்து அந்த வீட்டுக்கு விரைந்த போலீஸார் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த மாணவியை மீட்டனர். அவரிடம் விசாரித்ததில், கடந்த 4 நாட்களாக தன்னை சந்தன் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறினார்.
இதையடுத்து சந்தன், அவனது நண்பன் பிரமோத் ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர்.
மாணவியை விபச்சாரக் கும்பலிடம் விற்கவும் சந்தன் பேரம் பேசி வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications