இடிந்ததோ 20... அரசாங்க கணக்கோ ஒண்ணே ஒன்னு: என்னக் கொடுமை சார் இது...?
சென்னை: 2012ல் சென்னையில் 20 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில்,தேசிய குற்ற ஆவணக் காப்பக கணக்கு படியோ, ஒரே ஒரு கட்டிடம் மட்டுமே இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாக கணக்கு காட்டப் பட்டுள்ளது.
இது, மாநில குற்ற ஆவணக் காப்பகம் சரியாக தகவல்களைத் தருவதில்லை என்பதையும், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல்களை சரிபார்ப்பதில்லை என்பதையுமே காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், தவறான இந்தத் தகவல்கள் மூலம் குற்றவாளிகள் தப்ப நிறைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.

அதிக பலி...
இதுபோலவே, 2011ம் ஆண்டு தென்மாநிலங்களிலேயே அதிக அளவாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி 437 பேர் பலியானார்கள். ஆனால், அவ்வாண்டு வெறும் 21 பேர் மட்டுமே, 22 கட்டிட விபத்துகளில் சிக்கி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

விதிமுறை மீறல்...
பெரும்பாலும் இத்தகைய கட்டிட இடிபாடு விபத்துகளுக்கு விதி முறைகளைப் பின்பற்றாமல் வீடு கட்டுவதே காரணமாக அமைகிறது.

அலட்சியப் போக்கு...
விதிமுறைகளை மீறிய கட்டிடங்கள் என லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அடையாளம் காணப் பட்டுள்ள நிலையிலும், போதிய நடவடிக்கை எடுக்கப்படாமல் போகும் சிலரது அலட்சியங்களே மேற்கொண்டு விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன.

சரியான விவரங்கள் முக்கியம்...
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் காவல் ஆணையத் தலைவர் பூர்ணாலிங்கம் கூறும்போது, ‘குற்றம் நடை பெறும் போது சரியான விவரங்களைச் சேகரிப்பது மிகவும் முக்கியம்' என தெரிவித்துள்ளார்.

பால்கனி விபத்து...
சில தினங்களுக்கு முன் கூட 4 மாதக் குழந்தையின் தாயான புவனேஸ்வர் என்ற பெண் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானார். மேலும், காயமடைந்த இரு சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications