மலிவு விலை காய்கறி கடைகளில் 10 நாட்களில் ரூ.50 லட்சம் விற்பனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட மலிவு விலை காய்கறி கடைகளில் 10 நாட்களில் 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காய்கறிகள் விலையேற்றத்தை தடுக்க முதல்வர் ஜெயலலிதா பசுமை பண்ணை காற்கறிகள் விற்பனை திட்டத்தை கடந்த 20-ந் தேதி தொடங்கி வைத்தார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 29 இடங்களில் இந்த மலிவு விலை காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் காய்கறிகளை கொள்முதல் செய்து பசுமையாக விற்பனை செய்யப்படுவதால் இத்திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

நேரடி கொள்முதல்

நேரடி கொள்முதல்

ஊட்டி, கிருஷ்ணகிரி, ஓட்டன் சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நேரில் சென்று விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் காமதேனு சூப்பர் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து காய்கறி கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

நிரம்பி வழியும் கூட்டம்

நிரம்பி வழியும் கூட்டம்

காய்கறிகள் பொதுமக்கள் தேவைக்கு போதுமான அளவு வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் காய்கறிகளை தேர்வு செய்து எடுக்கவும் அனுமதிக்கப்படுகிறது. இதனால் மலிவு விலை காய்கறி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இரவு வரை காத்திருந்து காய்கறிகளை வாங்கி செல்வதால் வெளி மார்கெட் காய்கறி கடைகளில் விற்பனை சரிந்தது.

வெளி மார்க்கெட்டில் சரிவு

வெளி மார்க்கெட்டில் சரிவு

இதனால் தனியார் காய்கறி கடைக்காரர்களும் மலிவு விலை கடைகளில் விற்கப்படும் விலைக்கே தற்போது விற்பனை செய்கிறார்கள். பீன்ஸ், அவரைக்காய், கத்தரிக்காய் போன்றவற்றின் விலையை திடீரென குறைத்தனர். தனியார் காய்கறி கடைகளில் விலை குறைக்கப்பட்டு இருந்தாலும், ஏழை, நடுத்தர மக்கள் அரசின் காய்கறி கடைகளை நாடிச் செல்கிறார்கள்.

கூடுதல் பில் கவுண்டர்கள்

கூடுதல் பில் கவுண்டர்கள்

காய்கறிகள் தட்டுப்பாடு இல்லாமல் பசுமையாகவும், நீண்டநேரம் காத்து நிற்காமல் உடனே வாங்கிச் செல்ல ஏதுவாக அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. காய்கறிகள் வாங்க வருபவர்கள் பில் போடுவதற்கு ரொம்ப நேரம் காத்து நிற்பதை தவிப்பதற்காக கூடுதலாக பில்லிங் கவுண்டர்கள் திறக்கப்படுகின்றன. தற்போது 29 எலக்ட்ரானிக் பில்மெஷின் உள்ளது. மேலும் 19 மெஷின் வாங்கப்படுகிறது.

கூட்ட நெரிசல் இல்லை

கூட்ட நெரிசல் இல்லை

மழைக்காலத்தில் பொதுமக்கள் நின்று பொருட்களை வாங்க வசதியாக கூடாரம் அமைக்கப்படுகிறது. ஊழியர்கள் பணியில் சேர்வடையாமல் இருப்பதற்காக மேலும் ஒரு ஷிப்டுக்கு ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். கூட்ட நெரிசல் இல்லாமல் காய்கறிகள் வாங்கி செல்ல வசதியாக வெளிபுறங்களில் காய்கறிகள் குவிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெளிமாநில வெங்காயம்

வெளிமாநில வெங்காயம்

மாலையில் காய்கறிகள் பிரஷாக விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. தாமதம் இல்லாமல் காய்கறிகள் கிடைக்க ஒவ்வொரு கடைக்கும் தனித்தனி ஆட்டோ பயன்படுத்தவும் முடிவு செய்யப்படுகிறது. உருளை கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை வெளிமாநிலங்களில் மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.50 லட்சம் விற்பனை

ரூ.50 லட்சம் விற்பனை

திட்டம் தொடங்கி 10 நாளில் அதாவது 30-ந்தேதி வரை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 492 கிலோ காய்கறிகள் (160 மெட்ரிக் டன்) விற்பனையாகி உள்ளது. மொத்தம் 43 லட்சத்து 25 ஆயிரத்து 369 ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளது. இந்த இரண்டு நாட்களையும் சேர்த்தால் காய்கறிகள் விற்பனை மதிப்பு ரூ.50 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு காய்கறி கடையை திறக்க அரசு யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+