கேரியர் பேக்கில் கேக்கை 'சுட்டு'.. ஐயங்கார் பேக்கரியில் அட்டகாசம் செய்த ஏட்டு!!
நாமக்கல்: நாமக்கல்லில் பேக்கரிக்குள் புகுந்து பிஸ்கட் மற்றும் கேக் திருடிய ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் பிரகலநாதன்(44). அவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். சாலை ஓரங்கள் மற்றும் ஊருக்குள் இருக்கும் இரவு நேர டீக்கடைகள் இரவு 11 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை அடைத்திருக்கப்பட வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
எந்த கடையாவது உத்தரவை மீறி திறந்திருந்திருக்கிறதா என்று கண்காணித்து வந்த ஏட்டு சேலம்-நாமக்கல் பைபாஸ் சாலையில் பாச்சல் பிரிவு ரோட்டில் இருக்கும் ஐயங்கார் பேக்கரிக்கு சென்றுள்ளார். கடை ஊழியர்கள் வெளிப்புறம் துணி திரையால் கடையை மூடிவிட்டு உள்ளே தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த நேரத்தில் ஏட்டு மெதுவாக பேக்கரிக்குள் சென்று விலை உயர்ந்த கேக்குள், பிஸ்கட் ஆகியவற்றை எடுத்து 2 கேரி பேக்கில் போட்டுக் கொண்டு நைசாக நழுவிவிட்டார். காலையில் எழுந்த ஊழியர்கள் கடையில் உள்ள சரக்கு குறைந்துள்ளதை பார்த்தனர். உடனே அவர்கள் கடையில் இருந்த சிசிடிவி கேமராவை போட்டுப் பார்த்தபோது அதில் ஏட்டு பிஸ்கட், கேக் திருடியது பதிவாகி இருந்தது.
இது குறித்து கடை நிர்வாகம் மாவட்ட எஸ்பி கண்ணம்மாளிடம் புகார் கொடுத்தது. அவர்களின் புகாரின்பேரில் ஏட்டு பிரகலநாதன் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். பின்னர் நேற்று அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications