நெல்லையில் வயிற்றுப்போக்குக்கு வீட்டு வைத்தியம் ஒத்துக்கொள்ளாமல் 2 வயது பெண் குழந்தை பலி
நெல்லை: நெல்லையில் வயிற்றுப்போக்கிற்கு அளவுக்கு அதிகமாக வீட்டு வைத்திய மருந்தை கொடுத்ததால் 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தையை அதன் தாய் அருகில் உள்ள சித்தா மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவர் குழந்தையை பரிசோதித்துவிட்டு அதற்கு கற்பூரம் மற்றும் மிளகுத்தூளை தேனில் கலந்து கொடுக்குமாறு கூறியுள்ளார்.
அந்த பெண் மருத்துவர் கூறிய அளவை விட அதிகமாக அந்த பொடியை தேனில் கலந்து கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் குழந்தையின் உடல் நலம் மோசமானது. உடனே குழந்தையை பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர் அதற்கு கொடுக்கப்பட்ட மருந்து விஷமாக மாறியதாகக் கூறி சிகிச்சை அளித்தார்.
ஆனால் குழந்தை சிகிச்சை பலன் இன்றி இன்று பரிதாபமாக உயிர் இழந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications