டிவிட்டர்.. காங்கிரஸின் சசி தரூரை முந்தினார் பாஜக மோடி!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: டிவிட்டரில் அதிக பிரபலமான அரசியல்வாதியாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உருவெடுத்துள்ளார். இந்த விஷயத்தில் அவர் காங்கிரஸ் எம்.பியம், மத்திய அமைச்சருமான சசி தரூரை முந்தி விட்டாராம்.

அதிக அளவிலான பாலோயர்கள் தரூரை விட மோடிக்குத்தான் தற்போது அதிகம் உள்ளனராம்.

முன்பு தரூர்தான் டிவிட்டரைக் கலக்கிக் கொண்டிருந்தார். தடுக்கி விழுந்தால் தரூர் டிவிட்டாகத்தான் இருந்தது. அதை தற்போது மாற்றி விட்டார் மோடி.

அதிக பாலோயர்கள் மோடிக்கே

அதிக பாலோயர்கள் மோடிக்கே

டிவிட்டரில் அதிகஅளவிலான பின் தொடர்பவர்களைக் கொண்ட இந்திய அரசியல்வாதியாக மோடி உருவெடுத்துள்ளார்.

மோடிக்கு 18,21,119

மோடிக்கு 18,21,119

நரேந்திர மோடிக்கு 18 லட்சத்து 21 ஆயிரத்து 119 பின் தொடர்பவர்கள் உள்ளனர்.

தரூருக்கு 18,20,728

தரூருக்கு 18,20,728

சசி தரூருக்கு 18 லட்சத்து 20 ஆயிரத்து 728 பின் தொடர்பவர்கள் உள்ளனர்.

இங்க ஜெயிச்சா அங்கயும் ஜெயிச்ச மாதிரியாம்

இங்க ஜெயிச்சா அங்கயும் ஜெயிச்ச மாதிரியாம்

இதுகுறித்து பாஜகவினர் கூறுகையில் நாட்டு மக்கள் மத்தியில்மோடியின் செல்வாக்கு அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது. நிச்சயம் 2014 தேர்தலில் பாஜகவுக்கே வெற்றி என்கிறார்கள்.

இதைப் போயி யாராச்சும் கணக்குல எடுப்பாங்களா...

இதைப் போயி யாராச்சும் கணக்குல எடுப்பாங்களா...

ஆனால் காங்கிரஸ் தரப்பில் கூறுகையில், டிவிட்டர் போன்ற சோஷியல் மீடியாக்களை வைத்து மக்கள் மனதைக் கணக்குப் போட முடியாது என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+