'லீ' ஜீன்ஸ் டிசைனை 'விப்ரோ' காப்பியடிச்சிருச்சாம்!!!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று விப்ரோ. நீதிநெறிக்கு பெயர் போன அந்நிறுவனம் பிரபலமான லீ ஜீன்ஸ் நிறுவனத்திற்கு பெங்களூரைச் சேர்ந்த ஹேப்பி கிரியேட்டிவ் சர்வீசஸ் செய்து கொடுத்த டிசைனை காப்பியடித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஹேப்பி நிறுவனம் லீக்கு பேப்பர் பேக்கிற்கான டிசைன் ஒன்றை கடந்த 2011ல் செய்து கொடுத்தது. அந்த டிசைன் பல்வேறு டிசைன் மற்றும் விளம்பர விருதுகள் விழாவில் பல்வேறு விருதுகளைப் பெற்றது. அந்த பேப்பர் பேக்கில் நெவர் வேஸ்டட் மற்றும் டு நாட் டிஸ்டர்ப் என்ற வாசகங்கள் இருந்தன.
லீ பேப்பர் பேக்குகளில் பரம பதம் விளையாட்டு அட்டையின் டிசைன் இருந்தது. இந்நிலையில் விப்ரோ இந்த ஆண்டு ஒரு பேப்பர் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் அப்படியே லீ டிசைன் இருப்பதுடன் நெவர் வேஸ்டட் என்ற வாசகமும் உள்ளது.
இந்த டிசைனை எடுக்கும் முன்பு விப்ரோ ஹேப்பி நிறுவனத்திடம் தெரிவிக்கவும் இல்லை, அனுமதியும் பெறவில்லை.
இது குறித்து ஹேப்பி நிறுவனத்தின் துணை நிறுவனர் கார்த்திக் ஐயர் கூறுகையில்,
எங்கள் டிசைனை அப்படியே காப்பியடித்திருப்பது அருவருப்பாக உள்ளது. அவர்கள் நிறத்தையோ, ஏன் பெயரைக் கூட மாற்றவில்லை. நெவர் வேஸ்டட் என்ற வாசகத்தையும் பயன்படுத்தியுள்ளனர். அந்த டிசைன் லீ நிறுவனத்திற்காக நாங்கள் செய்தது. உலக அளவில் அந்த டிசைனுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்தது. மேலும் அந்த டிசைனை பல்வேறு டிசைன் இணையதளங்கள் பாராட்டின. விப்ரோ ஒரு பெரிய நிறுவனம். இந்த டிசைன் திருட்டு பற்றி அதன் பங்குதாரர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். பெரிய நிறுவனங்களில் பல்வேறு குழுக்கள் பல்வேறு விஷயங்களை கவனிக்கும். அவர்கள் பல்வேறு குழுக்களாக பணிபுரிவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவர்களால் ஒன்றாக சேர்ந்து ஒரு விஷயத்தை செய்ய முடியாதது வருத்தம் அளிக்கிறது என்றார்.
விப்ரோ நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் வழங்கப்பட்ட பேப்பர் பேக்குகளில் தான் லீ டிசைன் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக விப்ரோ அறிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications