இளவரசனின் உடலை மறு பரிசோதனை செய்ய மறுப்பு: பதப்படுத்தி தந்தையிடம் ஒப்படைக்க ஹைகோர்ட் உத்தரவு
Subscribe to Oneindia Tamil

தர்மபுரி அரசு மருத்துவமனையில் இளவரசனின் உடல் இன்று காலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், இதற்கு இளவரசனின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து உடலை வாங்க மறுத்து போராட்டத்தி்ல் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இளவரசனின் உடலை மறு பரிசோதனை செய்யக் கோரி வழக்கறிஞர் சங்கரசுப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இளவரசனின் உடலை மறு பரிசோதனை செய்ய மறுத்ததோடு, உடலை பதப்படுத்தி தந்தையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையையும், வீடியோ பதிவையும் இளவரசனின் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் மறுபிரேத பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications