மைனர் விலைமாதுவுக்கு பணம் கொடுத்து உறவு வழக்கு: பெர்லுஸ்கோனிக்கு 7 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

Silvio Berlusconi sentenced to seven years in jail in bunga bunga sex trial
ரோம்: முன்னாள் இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு பங்கா பங்கா வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது.

முன்னாள் இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி(76) விலை மாதுகள், இளம் பெண்கள் பலருடன் உல்லாசமாக இருந்த பார்ட்டிகளுக்கு பெயர் தான் பங்கா பங்கா பார்ட்டி. இத்தனை கூத்தும் அவர் பதவியில் இருந்தபோது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பங்கா பங்கா பார்ட்டியில் அவர் மைனர் விலைமாதுவுக்கு பணம் கொடுத்து உறவு கொண்டது குறித்த வழக்கு இத்தாலி நாட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை 3 பெண் நீதிபதிகள் விசாரித்து வந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பெர்லுஸ்கோனி தனது அதிகராத்தை துஷ்பிரயோகம் செய்தது மற்றும் மைனர் விலைமாதுவுக்கு பணம் கொடுத்து உறவு கொண்டது ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

மேலும் அவர் தனது வாழ்நாளில் எந்த ஒரு அரசு பதவியிலும் இருக்க தடை விதித்துள்ளனர். இந்த தீர்ப்பை எதிர்த்து போராடப்போவதாக பெர்லுஸ்கோனி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+