பசில் ராஜபக்சேவுடன் தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு! பேச்சுக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி!

டெல்லிக்கு மூன்று நாள்கள் அரசு முறைப் பயணமாக பசில் ராஜபகசே கடந்த வியாழக்கிழமை வந்தார். அவரை தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் எஸ். வேணுகோபால், ஆலோசகர் என். தேவதாஸ், இலங்கை-இந்திய மீனவர் கூட்டமைப்பின் அமைப்பாளர் எஸ்.பி. அந்தோனிமுத்து, ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கத் தலைவர் ஏ. அல்போன்ஸ், செயலர் பி. ஜேசுராஜா, ராமேசுவரம் மாவட்ட மீனவர் சங்கச் செயலர் எம். சந்தியாஹு ஆகியோர் நேற்று காலை சந்தித்துப் பேசினர்.
இச்சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்க ஆலோசகர் தேவதாஸ், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. இது தொடர்பாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உள்ளிட்டோருடன் பேச்சு நடத்த ஏற்பாடு செய்வதாக பசில் ராஜபக்சே உறுதியளித்துள்ளார். இதையே சிறந்த முன்னேற்றமாகக் கருதுகிறோம் என்றார்.
தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் நேற்று மாலை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்துப் பேசினர். இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோரை சந்தித்துப் பேச உள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications