ஜெய்பூரில் மைனர் பேத்தியை 4 ஆண்டுகளாக கற்பழித்து வந்த 68 வயது தாத்தா கைது
ஜெய்பூர்: ஜெய்பூரில் 16 வயது சிறுமியை அவரது தாத்தாவே 4 ஆண்டுகளாக கற்பழித்து வந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரைச் சேர்ந்தவர் டீலா ராம்(68). ஓய்வு பெற்ற நாயப் சுபேதார். அவரது மகன் தனது குடும்பத்துடன் தௌசா மாவட்டத்தில் வசித்து வருகிறார். அவர் ஏழ்மையில் வாடுவதால் தனது மகளை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜெய்பூரில் உள்ள தந்தை வீட்டில் விட்டார். மனைவியை இழந்த டீலா ராம் பேத்தி தனது வீட்டில் தங்கி படிக்க வந்ததை தனக்கு சாதமாக எடுத்துக் கொண்டு அவரை கடந்த 4 ஆண்டுகளாக கற்பழித்து வந்துள்ளார். சிறுமி 12 வயதில் இருந்து கற்பழிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் இது குறித்து டீலா ராமிடம் பேசியும் பலனில்லை. டீலா ராம் தனது பேத்தியுடன் படிக்கும் மாணவி ஒருவரிடம் உனக்கு செல்போன் மற்றும் பிற பொருட்கள் வாங்கித் தருகிறேன் என்று நைசாக பேசியுள்ளார். ஆனால் அந்த சிறுமி டீலா ராமிடம் இருந்து தள்ளியே இருந்தார்.
இதற்கிடையே தாத்தாவின் தொல்லை தாங்க முடியாத சிறுமி பக்கத்து வீட்டில் வசிக்கும் மனோஜ் குமார்(26) என்பவரிடம் உதவி கோரினார். பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவருடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து சிறுமியை காணவில்லை என்று ஜோத்வாரா காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சிறுமி மனோஜுடன் தௌசாவில் இருப்பது கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியை கடத்திய குற்றத்திற்காக மனோஜ் கைது செய்யப்பட்டார். மேலும் சிறுமியை கற்பழித்த குற்றத்திற்காக டீலா ராம் கைது செய்யப்பட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications