புத்தகயா தாக்குதல்: மகாபோதி கோவில், புத்தர் சிலை பத்திரமாக உள்ளது: உள்துறை செயலாளர்
டெல்லி: இன்று காலை நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் மகாபோதி கோவில் வளாகத்திற்கும், அங்குள்ள புத்தரின் சிலைக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அனில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மகாபோதி கோவிலுக்கு உள்ளும், வெளியேயும் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் தீவிரவாதிகளின் வேலை. இந்த தாக்குதலில் மகாபோதி கோவில் வளாகத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. மேலும் அங்குள்ள புத்தரின் சிலை பாதுகாப்பாக உள்ளது. இது தவிர புத்த மடத்திற்கும் சேதம் ஏற்படவில்லை.
இன்று காலை 5.30 மணி முதல் 6 மணி வரை கோவில் வளாகம் மற்றும் போதி மரத்திற்கு அருகே தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. 4 குண்டுகள் கோவில் வளாகத்திற்குள்ளும், 3 குண்டுகள் புத்த மட வளாகத்திலும், ஒரு குண்டு புத்தர் சிலைக்கு அருகிலும் வெடித்தன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
தேசிய புலனாய்வு நிறுவனம் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications