புத்தகயா தாக்குதல்: உளவுத்துறை எச்சரிக்கையை பீகார் அரசு ஏன் நிராகரித்தது?- பாஜக
டெல்லி: மகாபோதி கோவிலை தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்தும் அதை ஏன் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில்,
புத்தகயாவில் உள்ள கோவிலை தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்தும் அதை தடுத்து நிறுத்த பீகார் அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளது. இது போன்ற தாக்குதல்களை தவிர்க்க மத்திய அரசும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

உலகிற்கு அமைதியை போதித்த புத்தரின் கோவிலை தீவிரவாதிகள் தாக்கியுள்ளது சீரியஸான பிரச்சனை. இந்த தாக்குதலை பாஜக கடுமையாக கண்டிக்கிறது. இது போன்ற தாக்குதல்கள் மீண்டும் நடக்காமல் இருக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறுகையில்,
இந்த தாக்குதலை கண்டிக்கிறேன். இந்த தாக்குதல் குறித்து உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில் அதை தடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுடையது. இது குறித்த விசாரணை நடந்து உண்மை வெளிச்சத்திற்கு வரட்டும். பீகாரின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது. பீகாரை ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி 15 ஆண்டுகள் ஆட்சி செய்தபோது இது போன்ற சம்பவங்கள் நடந்ததே இல்லை. நம்மால் புத்த கோவில்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்ற தவறான தகவல் பரவும். இனி இந்த இடத்திற்கு வர மக்கள் பயப்படுவார்கள் என்றார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
Blast Day 1 Collection: அர்ஜுனின் பிளாஸ்ட் படத்திற்கு முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications