புத்த கயா குண்டுவெடிப்பு.. மோடி ஏன் காரணமாக இருக்கக் கூடாது?: ட்விட்டரில் திக்விஜய்சிங்!
டெல்லி: பீகார் மாநிலம் புத்த கயா குண்டுவெடிப்புக்கு முஸ்லிம்கள் காரணம் என்போர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஏன் காரணமாக இருக்கக் கூடாது என்று சிந்திப்பது இல்லை என மூத்த காங்கி்ரஸ் தலைவர் திக்விஜய்சிங் புது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறார்.
மியான்மரில் முஸ்லிம்களை படுகொலை செய்ததற்கு பழிவாங்கும் வகையிலேயே பீகார் மாநிலம் புத்த கயாவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறலாம் என்று மத்திய உளவு அமைப்பு ஏற்கெனவே எச்சரித்தது என்று ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டிருந்தன.
இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், பாரதிய ஜனதா கட்சியும் ஊடகங்களும் மத்திய உளவு அமைப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி, புத்தகயா சம்பவத்துக்கு முஸ்லிம்கள் காரணம் என்கின்றன. மத்திய உளவு அமைப்பான ஐபி கொடுத்த எச்சரிக்கையை பீகார் அரசு புறக்கணித்துவிட்டது என்கின்றனர். புத்த கயா சம்பவத்தின் மூலம் அரசியல் செய்கின்றனரா? முழுமையான விசாரணை நடத்தாமலேயே இவர்கள் முஸ்லிம்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று கூறுகின்றனரா?
இன்னொரு பக்கமும் பாருங்கள்... அயோத்தியில் மிகப் பெரிய கோயில் கட்டப்படும் என்று பாஜகவின் அமித்ஷா கூறினார். பீகார் மாநில பாஜகவினரிடையே பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியோ, நிதீஷ்குமாருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றார். அதற்கு மறுநாளே புத்தக கயாவில் மகாபோதி கோயிலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. இரண்டுக்கும் தொடர்பிருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று பற்ற வைத்திருக்கிறார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications