என்.எல்.சி.யின் பங்குகளை தமிழகத்திற்கு விற்க செபி பரிந்துரை

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசனின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருந்தது. இதற்கு தொழிலாளர்களும், தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு 5 சதவீத பங்கை விற்பனை செய்யும் முடிவில் முனைப்பாக இருந்தால், தமிழ் நாட்டிற்கே தரலாம் என ஜெயலலிதா கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார்.
இதுகுறித்து இன்றும் 3வது முறையாக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதாக இருந்தால், தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் டிட்கோ, சிப்காட், டிக் போன்ற ஏதேனும் ஒரு நிறுவனத்துக்கு விற்பனை செய்யலாம் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஜெயலலிதாவின் கோரிக்கை குறித்து, மத்திய அரசு, செபி அமைப்பிடம் தெரிவித்தது.இந்நிலையில், ஜெயலலிதா கோரிக்கை குறித்து பங்கு விற்பனை துறைக்கு செபி அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அதில், 'என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறைக்கு விற்பனை செய்யலாம்' என செபி பரிந்துரைத்துள்ளது.
என்.எல்.சி. 5 சதவீத பங்கை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என அதன் தொழிலாளர்கள் 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications