ஸ்பெக்ட்ரம் வழக்கு: தயாளு அம்மாள் உடல்நிலையை ஆய்வு செய்ய மருத்துவர் குழு- சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டிவி ஆதாயம் அடைந்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கலைஞர் டிவியின் பங்குதாரரான தயாளு அம்மாள், சிபிஐ தரப்பு சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியமளிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் நேரில் ஆஜராகி சாட்சியமளிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தயாளு அம்மாள், சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். ஆனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகளும் தயாளு அம்மாளின் மனுவை விசாரிக்க மறுத்தனர். இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த திங்கள்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவை ஆய்வு செய்த நீதிபதி பி.சதாசிவம் மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தார். இதன்படி நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பெஞ்ச் முன்பு நேற்று இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பட்டியலிடப்பட்டு இருந்தது.
ஆனால் தயாளு அம்மாளின் மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதி ராதாகிருஷ்ணன், ஸ்பெக்ட்ரம் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஜி.எஸ்.சிங்வியையும் உள்ளடக்கிய பெஞ்ச் இன்று விசாரிக்கும் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணைக்காக தயாளு அம்மாள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது, தயாளு அம்மாளின் உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் 3 வார காலத்துக்குள் தயாளு அம்மாள் உடல்நிலை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் தயாளு அம்மாளுக்காக மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடினார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications