வெனிசுலாவில் தஞ்சமடைகிறார் ஸ்னோடென்!
Subscribe to Oneindia Tamil

உலக நாடுகளை அமெரிக்கா எப்படியெல்லாம் உன்னிப்பாக உளவு பார்த்தது என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டவர் ஸ்னோடென். இதனால் அதிர்ந்து போன அமெரிக்கா அவரை தேச துரோக குற்றவாளியாக அறிவித்தது. ஆனால் ஸ்னோடென் அமெரிக்காவைவிட்டு வெளியேறினார். அவரை உடனே ஒப்படைக்கும்படி உலக நாடுகளிடம் கேட்டுக் கொண்டது அமெரிக்கா.
சீனாவின் ஹாங்காங்கில் இருந்த அவர் கடந்த மாதம் 23-ந் தேதி ரஷியாவுக்குள் நுழைந்தார். ரஷியாவின் சிரிமெத்யோவ் விமான நிலையத்திலேயே தங்கி இருந்தபடி இந்தியா உட்பட 19 நாடுகளிடம் அவர் அடைக்கலம் கோரியிருluந்தார். இந்நிலையில் வெனிசுலா, நிகரகுவா ஆகிய நாடுகள் அவருக்கு அடைக்கலம் தர முன்வந்தன.
இதைத் தொடர்ந்து வெனிசுலாவில் அவர் தஞ்சமடைய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications