புத்தகயா குண்டுவெடிப்பு: மகாபோதி ஆலய ஊழியர்கள் 6 பேர் மாயம்
பாட்னா: புத்தகயாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு பின் மகாபோதி கோயிலில் பணியாற்றி வந்த பெண் உள்பட 6 ஊழியர்கள் திடீரென மாயமாகியுள்ளது போலீஸ் வட்டாராத்தில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயிலில் கடந்த 7ஆம் தேதி தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் புத்ததுறவிகள் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வரும் நிலையில், மகாபோதி கோயிலில் பணியாற்றி பெண் உள்பட 6 பேர் மாயமாகி உள்ள தெரியவந்துள்ளது. இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாபோதி கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்ட தேசிய புலனாய்வு அமைப்பினர் மாயமான 6 பேரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மாயமான 6 பேரும் மகாபோதி கோயில் நிர்வாக கமிட்டியில் கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வந்துள்ளனர்.
குண்டுவெடிக்கு நடந்த அன்று காலை மகாபோதி கோயிலுக்கு சந்தேகத்துக்கிடமான 3 பேர் ஆட்டோவிலும் அதைத் தொடர்ந்து மேலும் 3 பேர் காரிலும் வந்துள்ளனர். இவர்களில் ஒரு பெண்ணும் உள்ளார். இந்த காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்












Click it and Unblock the Notifications