காதல் தோல்வி: ஹைதராபாத்தில் பெண் சாப்ட்வேர் என்ஜினியர் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

பெங்களூரைச் சேர்ந்தவர் அஸ்வினி நாயர்( 22). அவருக்கு ஹைதராபாத்தில் உள்ள ஆரக்கிள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் கடந்த மாதம் 24ம் தேதி அந்த நிறுவனத்தில் சேர்ந்தார். கடந்த செவ்வாய்கிழமை அலுவலகத்திற்கு சென்ற அவர் 7வது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது கைப்பையில் இருந்த டைரியில் ஒரு தாளில், எனது சாவுக்கு யாரும் காரணமில்லை. அம்மா, அப்பா, அதிதி இந்த முடிவை நான் எடுத்ததற்காக மன்னித்துவிடவும் என்று மட்டும் எழுதி இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஸ்வினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அஸ்வினி சூரத்கல்லில் உள்ள என்ஐடியில் படிக்கையில் தன்னுடன் படித்த ரவீஷ் ஜார்ஜ் என்பவரை காதலித்து அது தோல்வியில் முடிந்துள்ளது. ரவீஷ் வேலை கிடைத்து மும்பைக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த அஸ்வினி கடந்த ஓராண்டு காலமாக மனோதத்துவ மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த காதல் தோல்விக்கு பிறகு அவரால் சகஜமாக இருக்க முடியவில்லை என்றும், அதனால் தான் அவர் இந்த முடிவை எடுத்துவிட்டார் என்று அவரது நண்பர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications