ரமலானை முன்னிட்டு 973 கைதிகளை விடுவித்த ஐக்கிய அரபு அமீரகம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் இருந்த இந்தியர்கள் உள்பட 973 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
புனித ரமலான் மாதம் பிறந்துவிட்டது. இதையடுத்து வளைகுடா நாடுகளில் நேற்று முதல் நோன்பு வைக்கத் துவங்கிவிட்டனர். ரமலான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர்கள் உள்பட 973 கைதிகள் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் ஜயித் அல் நஹ்யான் கடந்த 8ம் தேதி இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications