ராகுல் விவகாரம்...’நார்த் இந்தியா நாராயணசாமி’ திக்விஜய் பேச்சுக்கு ஜனார்த்தன் திவேதி மறுப்பு!
டெல்லி: பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படமாட்டார் என்ற ‘நார்த் இந்தியா நாராயணசாமி'யான திக்விஜய்சிங் பேச்சுக்கு காங்கிரஸின் மற்றொரு பொதுச்செயலரான ஜனார்தன் திவேதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
வருகிற லோக்சபா தேர்தலின்போது ராகுல் காந்தியை பிரதமராக காங்கிரஸ் அறிவிக்காது என்று திக்விஜய்சிங் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனார்தன் திவேதி, லோக்சபா தேர்தலை யார் தலைமையில் மேற்கொள்வது என்பது பற்றி காங்கிரஸ் மேலிடம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. யார் தலைமையில் தேர்தல் பிரசாரம் என்பது பற்றியும் எந்த முடிவும் எடுக்கவில்லை. ராகுல்தான் பிரதமர் வேட்பாளரா? என்பதை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும். எங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் பட்டியலில் ராகுலும் இருக்கிறார். இது தொடர்பாக சிலருக்கு வேண்டுமானால் மாறுபட்ட கருத்து இருக்கலாம்.












Click it and Unblock the Notifications