மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழில் வாதடியதற்கு நீதிபதி கண்டனம்- வழக்குகள் தள்ளுபடி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தமிழில் வாதாடிய வழக்கறிஞருக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்து வழக்குகளையும் தள்ளுபடி செய்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த புலவர் சுந்தர்ராஜன் தமது வீட்டுக்கு பிளான் அப்ரூவல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல் மெக்காவில் பரிதவிக்கும் தமது கணவரை மீட்டு தரக் கோரி மதுரை ஆயிஷாபானு என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த 2 வழக்குகளிலுமே வழக்கறிஞர் பகத்சிங் ஆஜராகி வந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது ஆஜரான பகத்சிங், தமிழில் வாதாடினார். இதற்கு நீதிபதி மணிக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்கிலத்தில்தான் வாதாட வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆனால் தாம் தமிழிலேயே வாதாடுவேன் என்று பகத்சிங் தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதி மணிக்குமார் பகத்சிங் ஆஜரான 2 வழக்குகளையும் தள்ளுப்டி செய்துவிட்டார். இந்த சம்பவம் வழக்கறிஞர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+